திருச்சி அருகே சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை நெல், கத்திரி நாற்று, மிளகாய் நாற்று உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையத்தில் விவசாயிகளின் நலன்களுக்காக அவ்வப்போது புதிய விஞ்ஞான தொழில்நுட்பங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், நாற்றுகள் போன்றவற்றையும் உற்பத்தி செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது,
- கிழக்குக் கடற்கரை நெட்டை (இ.சி.டி.) ரக தென்னை நாற்றுகள் தலா ரூ. 25-க்கும்,
- ஆந்திர பொன்னி (பிபிடி 5204) விதை நெல் கிலோ ரூ. 20 வீதமும்,
- ஊர்ச்சி ரக கத்திரி நாற்று (குழித்தட்டு நாற்று) 35 பைசா வீதமும்,
- பிரியங்கா ரக மிளகாய் நாற்று (குழித்தட்டு நாற்று) 40 பைசா வீதமும்
விற்பனை செய்யப்படுகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரடியாக அணுகி முன் பணம் செலுத்தி பதிவு செய்தோ அல்லது உடனடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.