நெற்பயிரைத் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி?
- விதை நேர்த்தி செய்து, நோய் எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- நோய் பாதிக்கும் இடங்களில் நெருக்கி நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் இலைகளின் நடுவே காற்றின் ஈரப்பதம் குறைந்து நோய் உண்டாகும் சூழ்நிலையைத் தவிர்க்க முடியும்.
- வயலில் களைக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
- களை எடுக்கும் போதே அடித்தூர்களில் உள்ள காய்ந்த இலைகளையும் அகற்ற வேண்டும். இதன் மூலம் நோய்க் காரணிகளை நீக்கமுடியும். இதனால் கூடுதல் சாகுபடி செலவு ஏற்படாது.
- அதிக தழைச்சத்து இடுவதால் அடர்த்தியான இலைகள் தோன்றி நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
- சரியான நேரத்தில் பயரின் தேவையறிந்து உரமிடுவது சிறந்தது.