அரியலூர் மாவட்டத்தில் புதிதிதாக தென்னந்தோப்பு அமைக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு திட்ட விளக்க கையேடுகளை வெளியிட்டு, 1 பயனாளிக்கு ரூ. 6,640 மதிப்பிலான விசைத்தெளிப்பான், 6 பயனாளிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள், 30 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடனுதவியாக ரூ. 58.61 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:
அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 954 மில்லி மீட்டரில், கடந்த ஆண்டு 962 மில்லி மீட்டரும், நிகழாண்டு இதுவரை 677.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட 167 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. கடந்த ஆண்டு 27,400 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
நிகழாண்டு, இதுவரை 8,710 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு தானியங்கள் 16,760 ஹெக்டேர் பரப்பிலும், பயிறுவகை பயிர்கள் 1,255 ஹெக்டேரிலும், பருத்தி 8,000 ஹெக்டேரிலும், கரும்பு 8,015 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்து 6,150 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சம்பா பருவத்துக்கு ஏற்ற ஆடுதுறை 38, ஆடுதுறை 39 மற்றும் ஐ.ஆர். 20 ஆகிய விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கார்த்திகை பட்டத்துக்கு தேவையான எண்ணெய் வித்துகள் 15 டன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. யூரியா 1,351 மெ.டன், டி.ஏ.பி 953 மெ.டன், பொட்டாஷ் 845 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 1,122 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் விற்பனை மையங்களில் இருப்பு உள்ளது. மேலும் தேவையான உரங்கள் திருச்சி டான்பெட் மூலம் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் மூலம் புதிதாக தென்னந்தோப்பு அமைக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 17,500-ம், பழைய தென்னந்தோப்பை பராமரிக்க ஹெக்டேர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 17,500-ம் மானியமாக வழங்கப்படும். தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையம் நஞ்சை மாதிரி அமைக்க 24 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில், அதிகபட்சமாக ரூ. 1 லட்சமும், நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிக்கு ஹெக்டேர் ஒன்றக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், துல்லிய பண்ணையம் அமைக்க ஹெக்டேர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரமும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 900 மதிப்பீட்டில் உயிரியல் காரணியும், 50 சதவீத மானியத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 1,250 மதிப்பீட்டில் நுண்சத்து வழங்கப்படும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, வேளாண்மை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் முருகன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) செüந்தர்ராஜன், பாரத ஸ்டேட் பாங்க் முன்னோடி வங்கி தலைமை மேலாளர் துளசி மாதவராஜ், பாங்க் ஆப் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.