நமது கிராமப் புறங்களில் கணவனை இழந்த பெண்களும்,
குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்களும், கூட்டாக இணைந்து வேளாண் துறையில்
உணவு உற்பத்தியில் ஈடுபட்டு, கெüரவமாக வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக 1994-ம் ஆண்டில் தொடங்கி 20 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சார்பில் இப்புதிய வேளாண் மாற்று செயல்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டு விவசாய முறையின் வாயிலாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு, வேளாண் உற்பத்தி மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகள் வெகுவாக பெருகி வருகின்றன. இயற்கை வேளாண் முயற்சிகளைக் கொண்டு இயங்கி வரும் இப்பெண்கள் சங்கங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத வேளாண் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.
கூட்டு விவசாயம் செயல்படும் முறை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீண் தெரிவித்தது:
தற்போது கூட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள 10 பெண் உறுப்பினர்களை கொண்ட கிராமப்புற சங்கங்கள் தேர்வு செய்யப்படுகிறது. இதில் கணவனை இழந்த பெண்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள், நிலம் இல்லாத பெண் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடன் விவசாயப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு களப் பணியாளர்களுடன் நடத்தப்படும் இக்கூட்டங்களில் குழுக்கள் தங்களின் உழைப்பு மற்றும் முதலீட்டுத் திறனுக்கு ஏற்ற விவசாய நிலங்களைத் தேர்வு செய்து, தங்கள் கிராமங்களில் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தின்படி நிலத்தின் உரிமையாளருக்கு மூன்றில் ஒரு பங்கு விளைபொருள்களை வழங்க வேண்டும். பின்னர் விவசாயக் குழுக்களுக்கு தொண்டு நிறுவனம் வாயிலாக வேளாண் பயிற்சிகள் வழங்கப்படும்.
கூட்டாக மேற்கொள்ளும் விவசாய முறைகள், பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்யும் முறைகள், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் சிறந்த வேளாண் வல்லுநர்கள் கொண்டு வழங்கப்படும்.
பின்னர் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சார்பில் ஒவ்வொரு பெண் குழுவுக்கும் வேளாண் பணிகளை மேற்கொள்ள விதைப் பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. ÷இதைக் கொண்டு அவர்கள் வேளாண் இடுபொருள்களை விலைக்கு வாங்கி வேளாண் பணிகளை தொடங்க முடியும்.
இக்கூட்டு விவசாய முயற்சியில் வாரந்தோறும் சாகுபடி காலத்தில் பெண்கள் கூட்டம் நடத்தி வேலைப் பகிர்வை செய்து கொள்ள வேண்டும். சுழற்சி முறையில் பெண்கள் வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இப்பணிகள் மேற்கொள்ளும்போது கிடைக்கும் வேளாண் பொருள்களை திறம்பட மறுசுழற்சிக்குப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக களைகளை அகற்றும் போதும் அவற்றை கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம். அடுத்ததாக நடைமுறையில் இப்பெண் குழுக்கள் செயல்படும் தன்மையைப் பார்த்து அருகில் உள்ள நிலமுள்ள விவசாயிகள் பல உதவிகளை செய்கின்றனர்.
ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக இயற்கை வேளாண் இடுபொருள்களை உற்பத்தி செய்ய மாட்டுக் கழிவுகளை வழங்குகின்றனர். இவ்வாறு பெண்கள் குழுவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு பல வேளாண் இயற்கைச் சீற்றங்களை சந்தித்து ஒரு மிகப்பெரிய அளவிலான கிராமப்புற சார்பு வேளாண் உற்பத்திப் பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டு விவசாயத்தின் பிற பயன்கள்: கிராமப்புறங்களில் வறுமை ஒழிக்கப்படுவதுடன் கூட்டு விவசாய முறைகள் வாயிலாக வேளாண் உற்பத்தி பெருக்கம் ஏற்படுகிறது. பெண்கள் குழு முறையான வங்கிக் கணக்குகள் மற்றும் கணக்கு, வழக்குப் புத்தகங்கள், ஆலோசனை, கூட்டு முடிவுப் புத்தகங்களுடன் செயல்படுவதால் திறம்படவும், ஒளிவு, மறைவின்றியும் செயல்பட முடிகிறது.
அதிக விதை விலைகளை கருத்தில் கொண்டு தாங்களே விதை வங்கிகளை உருவாக்கி செயல்படும் பெண்கள் விவசாயக் குழுக்கள் தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை உருவாக்கும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
எனவே தமிழக கிராமப்புற பெண்கள் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சேலம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டு விவசாய முறைகளில் ஈடுபட்டு வறுமை ஒழிப்பில், வேளாண் உற்பத்திப் பெருக்கத்தில் ஈடுபட்டு வளம் பெறலாம் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீண்.
விவரம் பெற...
இது குறித்து விவரங்கள் பெற வேண்டிய முகவரி: பொன்னுத்தாயி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, 79- செண்பக விநாயகர் கோயில்தெரு, கீழபஜார், 7-வது வார்டு, வாசுதேவநல்லூர், சிவகிரி தாலுகா. விருதுநகர்-627758. செல்போன்: 94448 32021.