Monday, December 24, 2012

பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிப்பு நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை


மதுராந்தகம், : பருவமழை இந்த ஆண்டு பொய்த்துவிட்டதால் ஏரி பாசனம் மூலம் பயிர் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 258 ஏரிகளும் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 64, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 117, லத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில் 99, சித்தாமூர் ஒன்றியத்தில் 68 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. நெல், கரும்பு, வேர்க்கடலை முக்கிய விவசாயமாகும். 

ஒருபோக பயிர் அறுவடை செய்யக்கூட அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு பருவமழை தொடர்ச்சியாக பெய்து, ஏரிகள் நிரம்பிவிடும் என்று நம்பி விவசாயிகள், நெல், கரும்பு, வேர்க்கடலை பயிரிட்டனர். ஆனால் எதிர்பார்த்தபடி மழை இல்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். நீர்வரத்து நன்கு உள்ள மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட சில ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளது. பெரும்பாலான ஏரிகளில் பாதி அளவு தண்ணீர் உள்ளது.

இனிமேல் மழை பெய்யும் வாய்ப்பு மிகக் குறைவு. இதனால் பயிர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. மழையை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வேதனையில் உள்ளனர். மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற உரங்கள் எவ்வளவு இட வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:
தற்போது மானாவாரியிலும், இறவையிலும் மக்காச் சோளம் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மற்ற பயிர்களைப் போல் அதிக அளவில் பூச்சி நோய் தாக்குதல் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், சந்தையில் மக்காச் சோளத்துக்கு ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் கிடைத்து வரும் நிலையான கொள்முதல் விலைதான் என்பது காரணம்.
சாதாரணமாக விவசாயிகள் மக்காச் சோளப் பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள் இடுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.   நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாட்டால் மக்காச் சோளப் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் குறைகிறது. மக்காச் சோளத்துக்குத் தேவையான நுண்ணுரங்கள், சிறு தானிய நுண்ணுரம் என வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதல் பாதிப்பாக, முதிர்ந்த அல்லது அடி இலைகளின் ஓரங்கள் மற்றும் இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் மஞ்சளாகவும், வெளுத்தும் காணப்படும். இலைகள் பசுமை இழந்து வெண்மை நிறத் திட்டுகளுடன் காணப்படும். சில சமயம் முழுப் பயிருமே பச்சையமின்றி வெளுத்து வளர்ச்சி குன்றி காணப்படும். மணிகள் சிறுத்து மகசூல் குறையும்.
ஓர் ஏக்கருக்குத் தேவையான 5 கிலோ சிறு தானிய நுண்ணுரத்தை 15 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் மேலாகவும், சீராகவும் இட வேண்டும்.
பார் பிடித்து நடவு செய்வதாக இருந்தால், சிறு தானிய நுண்ணுரத்தை மணலுடன் கலந்து பார்களின் 3-ல் 2 பங்கு உயரத்தில் இட வேண்டும்.நுண்ணுரம் வீணாகமல் பயிருக்கு முழுமையாகவும், எளிதாகவும் கிடைக்கச் செய்ய ஆழமாக இடாமல் விதைப்புக்கு முன் நிலத்தில் மேலாக இட வேண்டும்