Wednesday, December 26, 2012

மீன் வளர்ப்பில் ஏக்கருக்கு இரண்டரை லட்சம் லாபம்

                 அனுபவ விவசாயி கெண்டைமீன் வளர்ப்பில் சாதனையை செய்துள்ளார். பிரெடெரிக் நிக்சன் மீன்வளர்ப்பில் ஒரு முன்னோடி. திருச்சி மாவட்டத்தில் லால்குடி தாலுகாவில் உள்ள மேட்டுக்குடி என்னும் கிராமத்தில் மீன் உற்பத்தி குளங்களை 5 ஏக்கர் நீர்பரப்புடன் அமைத்துள்ளார். மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான 9 குளங்களை 25 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளாளர். மீன்களை வளர்த்து உற்பத்தி செய்வதோடு மீன் குஞ்சுகளை வளர்த்து அவற்றைத் தேவையானவர் களுக்கு கொடுத்தும் உதவுகிறார்.

               வளர்ச்சிக்கான வேக வளர்ச்சிக் கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை மற்றும் சாதாக்கெண்டை ஆகிய ஆறு இனங்களும் வெள்ளிக்கெண்டை மீனைத்தவிர மற்ற ஐந்து வகை மீன்களையும் சேர்த்து ஒரே குளத்தில் இவர் கூட்டாக ஒரு எக்டர் பரப்பிளவுள்ள மீன்குளத்தில் வளர்த்தார்.
வளர்ப்புக் குளத்துக்கு 4 அடி ஆழம் நீர் பாய்ச்சி தேவையான இயற்கை மற்றும் ரசாயன உரங்கள் போட்டு மீன்களுக்கான இயற்கை உணவு 10-15 நாட்களுக்கு குளததில் உற்பத்தி செய்தார். பின்னர், விரலளவு நீளத்திற்கு மேல் வளர்ந்த 10,000 மீன் குஞ்சுகளை வளர்வதற்காக குளங்களில் இருப்பு செய்தார்.

              மீன் குஞ்சுகளுக்கு சிறப்புறச் செய்த "குரோபேஸ்ட்' என்னும் உணவைத் தினமும் தந்துவந்தார். சிறப்பான உணவாலும் மீன் குளத்துநீரின் தரப் பராமரிப்பாலும் மீன்களின் வளர்ச்சியும் அவற்றின் பிழைப்புத்திறனும் மெச்சும்படியாக அமைந்தன. இவற்றின் பயனால் நிக்சன் பெற்ற மொத்த மீன் உற்பத்தி ஆண்டொன்றுக்கு ஒரு எக்டருக்கு 11 டன்கள் (11,000 கிலோ) என நிகறற்றிருந்தது. 

             இவர் வருடத்தில் இருமுறை ஒரே குளத்தில் மீன் வளர்த்தார். மொத்தம் 20,000 மீன் குஞ்சுகளை வளர்ப்புக்குப் பயன்படுத்தியுள்ளார். ஒரு எக்டர் நீர் பரப்பில் ஒரு வருடம் கெண்டை மீன்களை இருமுறை வளர்த்துப்பெற்ற 11 டன் மீன்களை கிலோவிற்கு ரூ.100/- என்று மட்டுமே கணக்கிட்டார். மொத்த வருமானம் ரூ.11 லட்சம். செலவு போக பெற்ற நிகர வருமானம் ரூ.4,78,000/- (தகவல்: முனைவர் வெ.சுந்தர்ராஜ், 90030 13634)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்