பல்லடம் பகுதியில் பருவ மழை பொய்த்ததால், மக்காசோளப் பயிர் கருகி வருகிறது.
பல்லடத்தில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், அப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நீரின்றி வறண்டுவிட்டன.
தற்போது நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர். மின்வெட்டு பிரச்னையால் உரிய நேரத்தில் பயிருக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம் இந்தப் பகுதியில் செயல்படுத்தப்படுவதால், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் கிராமப் புறங்களில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. பல்லடம் சித்தம்பலம் சாலையில் உள்ள வடுகபாளையம்புதூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட மக்காசோளப் பயிர் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மக்காசோளம் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.