Tuesday, January 29, 2013

அதிக மகசூல் எடுத்தது எப்படி?


திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று தமிழக அரசின் வேளாண்மைத் துறை சிறப்பு விருதுக்கு தேர்வானது குறித்து மதுரை மாவட்ட விவசாயி சோலைமலை விளக்கமளித்தார்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த விருதினை முதல் ஆண்டாகப் பெறும் அவர் கூறியது:
திருந்திய நெல் சாகுபடி புதிய தொழில்நுட்ப முறையை பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன். சி.ஆர்.1009 ரகத்தின் ஆதார விதையை பட்டுக்கோட்டையில் இருந்து பெற்றேன். ஒரு ஏக்கருக்குத் தேவையான 3 கிலோ நெல் விதையை சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து இந்தப் புதிய தொழில்நுட்ப முறையின் மூலம் விவசாயம் செய்தேன்.
ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரத்து 272 கிலோ தானிய மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு 20 ஆயிரத்து 680 கிலோ தானிய மகசூல் எடுத்தேன். இவ்வாறு பயிரிடக் கூடிய அரிசி, உருவத்தில் பெரிய வகை அரிசியாகும். இந்த வகை அரிசியை சாதமாகச் சமைத்து சாப்பிடுவதைக் காட்டிலும், இட்லி, தோசை போன்ற மாவுகளுக்குப் பயன்படுத்தினால் ருசியாக இருக்கும். மேலும் அரிசி மாவுக்கும் இந்த வகை அரிசியை உபயோகிக்கலாம் என்றார் சோலைமலை.