Friday, February 15, 2013

முருங்கை மரத்தை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்


விவசாயம் மற்றும் காட்டுப்பகுதிகள் என்றில்லாமல் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் வீடுகளில்  முருங்கை மரங்களை வளர்த்தி வருகின்றனர். முருங்கை காய், முருங்கை கீரை போன்ற சமையலுக்காக இதிலிருந்து பொருட்கள் பெறப்படுகிறது. பொதுவாக வருடத்தில், குறிப்பிட்ட சில காலங்களில் முருங்கை  மரங்களில் ஒரு வித பூச்சிகளில் தாக்குதல் ஏற்படுகிறது. சில வகை பூச்சிகள் முருங்கை மரத்தில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. முருங்கை மரங்களில் காணப்படும் பூச்சிகளில் நூர்டா மொரிங்கோ, யூட்டிரோட் டெல்லிபெரா, ஜிட்டேர்னா டைஸ்டிக்மா உள்ளிட்ட பூச்சி இன்ங்கள் முக்கியமானவையாக உள்ளது.

    நூர்டா மொரிங்கோ பூச்சி மொக்குப்புழு என்று அழைக்கப்படுகிறது. இவை முட்டை பருவத்தில் வெண்ணிற நீள்வட்ட வடிவில் காணப்படும். புழுப்பருவத்தில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் முன்இறக்கைகள் வெண்ணிறத்திலும் காணப்படும். இந்த் பூச்சிகள் முருங்கை பயிரின் பூ மொக்குகளை துளையிட்டு சாப்பிடும். தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து காணப்படும். உதிர்ந்த பூ மற்றும் மொக்குகளை பொறுக்கி அழித்தும், ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளித்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
   நூர்டா பிளைட்டியாவிஸ் புழு இலைப்புழு என்றழைக்கப்படும். இவை முட்டை பருவத்தில் வெண்ணிற நீள்வட்ட முட்டை குவியல்கள் இலைகளில் காணப்படும். இதன் புழுக்கள், முன்மார்பு உறை இல்லாமல் இருக்கும். பூச்சி மொக்குப்புழுவை போலவே இருக்கும். ஆனால் சற்று பெரியதாகக் காணப்படும்.

    இந்தப்புழுக்கள் இலைப்பச்சையத்தைச் சுரண்டித் தின்பதால், இலைகள் சல்லடை போல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த மரத்தைச் சுற்றி உழவு செய்து, மண்ணில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம். விளக்குபொறி ஹெக்டேருக்கு ஒன்று அமைத்தும், தகுந்த மருந்துகளை தெளிக்கலாம். யூட்டிரோட் மெல்லிபெரா எனப்படும் கம்பளிப்புழு முட்டைப் பருவத்தில் இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும். இதன் புழுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் காணப்படும். இந்தப் பூச்சிகள் மரத்தின் தண்டுப்பகுதிகளில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும். புழுக்கள் கூட்டமாக சேர்ந்து சாப்பிடும். மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும். தாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாக காணப்படும். முட்டைக் குவியல்கள், புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். தீப்பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாக காணப்படும்.

ஜிட்டேர்னா டைஸ்டிக்மா எனப்படும் காய்புழு, முட்டை பருவத்தில் இளம் காய்களில் காணப்படும். புழு பருவத்தில் இளம் காய்களில் காணப்படும். புழு பருவத்தில் வெண்ணிற கால்களற்ற ஈக்களாக இருக்கும். இதன் ஈ மஞ்சள் நிறத்திலும், கண்கள் மட்டும் செந்நிறத்திலும் இருக்கும். இவை தாக்கிய பயிகளின் காய்கள் காய்த்தும், பிளந்தும் காணப்படும். காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடிவதே சேத்த்தின் அறிகுறி . இந்தப் பூச்சியை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மற்றும் காய்ந்து விழுந்த காய்களை சேகரித்து அழிக்கலாம்.

    கூட்டுப்புழுக்களை கொன்று, தாய் ஈ உருவாவதைத் தவிர்க்கலாம். தகுந்த மருந்துகளை உபயோகப்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.