நாட்டு முறையில் தொழு உரங்களின்
பற்றாக்குறையினால் வேளாண்மையில் குறைந்த அளவே இயற்கை உரங்கள் சேர்க்கப்படுவதால் மண்
இறுகி பயிர்வளர்ச்சி குன்றிவிடுகிறது. மண்புழு உரத்தில் மற்ற எல்லா உரங்களை விட அதிக
முதன்மை சத்துக்களும் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களான துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு
மற்றும் கந்தக சத்துக்கள் உள்ளன. இதன்மூலம் மண்ணின் கட்டமைப்பு சீரடைந்து,காற்றோட்டம்
அதிகரித்து நீர் உட்புகும் திறன் 30 சதவீதம் அதிகரிக்கிறது. இயற்கை விவசாயத்தில் மண்புழு
உரம் பெரும்பங்காற்றுகிறது. இலை, தழை, கழிவுப் பொருட்களை உண்டு, மண்புழுக்கள் தரும்
உரத்தின் பெயர் தான் மண்புழு உரம் எனப்படுகிறது.
காற்று புகுவதற்கும், மண்ணின் ஈரப்பதம் நீடித்திருப்பதற்கும்
அதிகப்படியான நீர் எளிதில் விழாததற்கும், வேர்கள்
நன்கு வளர்வதற்கும் பயன்படுகின்றன. இவை நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
இதனால் மண் வளமாகிறது. ஓராண்டில் சராசரியாக 6 கிராம் அளவு வளமான புதிய மண்ணை ஒவ்வொரு
மண்புழுவும் தருகிறது. மண்புழு உருவாக்கும் கழிவுப் பொருட்களில் 0.72 சதவீதம் தழைச்சத்து,0.25
மணிச்சத்து, 2.74 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது. பொதுவாக மண்புழு ஜூலை முதல் அக்டோபர்
வரை நன்கு இனப்பெருக்கம் செய்யும். இயல்பாக
உள்ளூரில் கிடைக்கும் மண்புழுவையே பயன்படுத்த வேண்டும்.
thanks to dinakaran
