துவரைப்
பயிரை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சி எனப்படும் ரிப்டோர்டஸ் பெடஸ்டரிஸ், அவரை நாவாய்
பூச்சி எனப்படும் ஏபிஸ் கிரேஸிவோரா, இலை தத்துப் பூச்சி எனப்படும் எம்போஸ்க்கா கெர்ரி,
வெள்ளை ஈ எனப்படும் பெமிசியாடேபேசி, ரியோபிட் கரையான் எனப்படும் எசிரியா கஜானி ஆகிய
பூச்சிகள் முக்கியமசனவை ஆகும்.
காய்நாவாய்ப்பூச்சி எனப்படும் ரிப்டோர்டஸ் பெடஸ்டிரிஸ்
பூச்சி பழுப்பு கலந்த கருப்பு நிற
த்தில், அரை வட்ட வடிவில் காணப்படும். இளம் பூச்சிகள்
அடர்பழுப்பு நிறத்தில் எறும்புகள் போன்று தோற்றமளிக்கும்.இப்பூச்சி தாக்கும் பயிர்களின்
காய்களில் கருப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். இளம் பச்சை காய் உதிரும். காய்கள் மோசமாக
வளர்ந்திருக்கும். காயின் உள்ளே வளர்ச்சி இன்றி பருப்புகள் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த
தகுந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
அவரை நாவாய்ப்பூச்சி எனப்படும் காப்டோசோடா கிரிப்ரேரியா
இளம்பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி அரை வட்ட வடிவமாக பச்சைய கேடய நாவாய் பூச்சி போன்று
காணப்படும். ஒருவித மோசமான வாசனை வெளிவரும். இந்த பூச்சி, செடியின் பகுதிகளில் பகுதிகளில் கூட்டமாக அமர்ந்து, சாற்றை
உறிஞ்சி குடித்து சேதப்படுத்தும்.
பீன் அசுவினி எனப்படும் ஏப்ஸ் கிரேஸிவோரா இளம்பூச்சி
மற்றும் தாய்ப்பூச்சி அடர்நிறத்தில், வயிற்றுப்பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்புடன்
காண்அப்படும். பயிரின் இலைகள், காம்பு மற்றும் காய்களை சுற்றி கூட்டம் கூட்டமாக காணப்படும்.
இந்த பூச்சியைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.
இலைகள் தத்துப்பூச்சி எனப்படும் எம்போஸ்க்கா கெர்ரியின்
நீளமாக, பச்சை கூர்மையாக காணப்படும். இந்த பூச்சி தாக்கிய பயிர்களின் இலைகளின் இலைகள்
பல வண்ண நிறமாக மாறும். மஞ்சள் நிறத்தில் காணப்படும் பச்சை நிறப்பூச்சிகள் இலையின்
அடிப்புரத்தில் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த
வேண்டும்.
வெள்ளை ஈ எனப்படும் பெமிசியாடேபேசி பூச்சி தாய்
பருவத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் , வெள்ளை நிற இறக்கைகளுடன் காணப்படும். உடலைச்
சுற்றிலும் மெழுகு போன்ற பொடியுடன் காணப்படும். இளம் பூச்சிகள் மற்றும் கூட்டுப்புழுவின்
விளிம்பில் நிறைய ரோமங்களுடன் காணப்படும். இந்த பூச்சி தாக்கிய பயிர்களின் இலைகள் மஞ்சள்
நிறத்தில் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த எண்ணெய் மற்றும் நீர் கலந்த பாத்திரம்
அல்லது எண்ணெய் தேய்த்த துணியை செடியின் கீழ் வைத்து உலுக்க வேண்டும். தகுந்த மருந்துகளை
பயன்படுத வேண்டும்.
ஈரியோபிட் கரையான் எனப்படும் எசிரியா கஜானி பூச்சி
இளம் பருவம் மற்றும் முதிர்பருவத்தில் வெள்ளை நிறமாகக் காணப்படும். மிகச்சிறிய அளவிலான
2 ஜோடி வேர்டேபேசி மிபார்ம் வடிவில் முன்புற கால்கள் அமைந்திருக்கும். இவை துவரை பல்வண்ண
தேமல் நச்சுயிரி நோய் பரப்பும் காரணியாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த, தகுந்த தடுப்பு
மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
