Saturday, July 31, 2010

நிகழாண்டு சம்பா பருவத்தில் கோ- 43


கோ- 43 ரகத்தை விதைக்கும்போது சென்ற ஆண்டு பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பெறப்பட்ட விதைகளை பயன்படுத்தக் கூடாது. சூடோமோனாஸ் என்ற உயிரியல் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற வகிதத்தில் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். இது பாக்ட்ரீயா தொடர்புடைய நோய்களை தடுக்கும்.    இல்லையெனில், பெவிஸ்டின் மருந்தை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்திட வேண்டும். நடுவதற்கு முன் ஒரு கிலோ சூடோமோனாஸ் மணலில் அல்லது மக்கிய குப்பை எருவுடன் கலந்து நிலத்தில் இட்டு நடவு செய்ய வேண்டும்.
பயிர் பூக்கும் தருவாயிலும், பால் பிடிக்கும் தருவாயிலும் காப்பர் ஹைட்ராக்சைடு ஏக்கருக்கு 500 கிராம் அல்லது புரோபோகோனோசால் ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து மாலைவேளையில் தெளிக்க வேண்டும்.    பொட்டாஷ் உரத்தினை மேலுரமாக இடவேண்டும். தழைச்சத்து அதிகம் இடக்கூடாது. இந்த முறைகளை கையாண்டு ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு மேற்கொள்வதன் மூலம் நெல், பழம் மற்றும் பாக்டீரியா இலைகருகல் நோய் கோ-43 ரகத்தில் வருவதை தடுக்கலாம்.