Saturday, February 5, 2011

களிமண் நிலத்திற்கான நடவுக் குறியீட்டுக் கருவி – ராஜராஜன் 1000


ராஜராஜன் 1000க்கு நடவு குறியீட்டுக்கருவி:
விவசாயி தன்னுடைய நிலத்தில் களிமண் பாங்கு அதிகம் இருப்பதால் நடவு குறியீட்டுக் கருவியினை பரிந்துரைப்படி கடைபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். எனவே தானே ஒரு குறியீட்டுக் கருவியினை உருவாக்கினார். அதாவது மூன்றேமுக்கால் அடி நீளத்தில் 11′ பிவிசி அளவுள்ள உருளையில் எடை குறைந்த, எளிதில் உபயோகிக்கக்கூடிய குறியீட்டுக் கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி உபயோகத்தால் தனக்கு ஒரு ஏக்கர் நடவிற்கு 12 பணியாட்களுக்குப் பதிலாக 6 நபர்களே தேவைப்பட்டனர். இதன் பயன்பாடு தற்பொழுது 980 எக்டர் நிலத்தில் உள்ளது என்று கூறுகிறார் விவசாயி. மற்ற உழவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இதன் பயன்பாடு நேரடி நெல் விதைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.350/-தான். இதனை பயன்படுத்தினால் விதை அளவு குறைந்து கோனோ களைக்கருவி உபயோகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது