தென்மாவட்டங்களில் வறட்சியால் வாழைகளில் மகசூல் இழப்பை சந்திக்க வேண்டிய
கட்டாயத்துக்கு விவசாயிகள் பலரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வறட்சியால்
வாழைக்காய்களில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, குலைதள்ளும் பருவத்தில்
வாழைத்தாரில் போதுமான காய்கள் இல்லாமை என்று பல்வேறு பிரச்னைகளும் இதற்கு
காரணமாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் திருச்சிக்கு அடுத்ததாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இம் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் ஏத்தன் வகை வாழைகளால் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. சிப்ஸ் தயாரிப்பதற்காக ஏத்தன் வாழைக்காய்களை கேரள வியாபாரிகள் மொத்தமாகக் கொள்முதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இவ்வாண்டு ஏற்பட்டுள்ள வறட்சியால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்திருக்கிறது. போதிய தண்ணீர் இல்லாததால் வாழைகள் போதிய வளர்ச்சி அடையாமல் இருந்தன. சமீபத்தில் மழை பெய்தபோது நுண்ணூட்ட உரங்களையும், தண்ணீரையும் அதிகளவில் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் சக்தியையும் இந்த வாழைகள் பெற்றிருக்கவில்லை. வறட்சியால் வாழைகளின் வேர்கள் பலமிழந்திருந்ததே இதற்கு காரணம்.
இப் பிரச்னையால் தற்போது குலைதள்ளும் பருவத்தில் வாழைகளில் எதிர்பார்த்த அளவுக்கு பருமனுடனும், எண்ணிக்கையிலும் காய்கள் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் ஏத்தன் வாழைகளில் குறைவான எண்ணிக்கையிலான காய்களுடன் வாழைகள் குலைதள்ளியிருப்பதாக வாழை விவசாயம் செய்துள்ள பி. பெரும்படையார் தெரிவித்தார். இதனால் வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது வாழைத்தார்கள் எடைகுறைவுடன் இருக்கும். இது வருமான இழப்பை ஏற்படுத்தும் நிலையுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதுபோல் தென்மாவட்டங்களில் வறட்சி மற்றும் நூண்ணூட்டக் குறைபாட்டால் வாழைக்காய்களில் வெடிப்பு ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்னை நெய்பூவன், ரஸ்தாளி ரகங்களில் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய காய் வெடிப்பால் வாழையின் மதிப்பு குறைந்து சந்தையில் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இத்தகைய வெடிப்புகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சாணம் உள்புகுந்து காயில் அழுகலை ஏற்படுத்தும். இதனால் ஒட்டுமொத்த வாழைத்தாரும் அழுகிவிடக்கூடும்.
பொதுவாக வாழைக்காயின் தோல் பகுதியில் ஏற்படும் வெடிப்பால் வாழையில் 2 முதல் 5 சதவிகித வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
வெடிப்புக்கு காரணம்: "இவ்வாறு வாழைக்காய்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி' என்று அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் து. வித்யா தெரிவித்தார்.
கடுமையான வறட்சி நிலவும் சூழ்நிலைகளில் அதிக அளவில் நீர் பாய்ச்சுதல் பழ வெடிப்புக்கு வழிவகுக்கும். வறட்சியின்போது அதிகளவு வெப்பம் நீடித்தாலும் பழ வெடிப்பு ஏற்படும். அந்த வகையில் வறட்சியால் வாடியிருந்த வாழைகளுக்கு சமீபத்தில் பெய்த மழையால் அதிகளவு தண்ணீர் கிடைத்தது. அதுவே வாழைக்காய்களில் வெடிப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. மேலும், காய்கள் பெருக்கம் அடையும்போது பழத்தோலின் வளர்ச்சி போதுமான அளவுக்கு அமையாமல் இருந்தாலும் பழ வெடிப்பு ஏற்படுகிறது. வாழையினுள் ஏற்படும் சத்துக்களின் ஏற்றத்தாழ்வு அதாவது போரான், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்துக்களில் ஏற்படும் பற்றாக்குறை பழ வெடிப்பைத் தூண்டுகிறது. காய்களைப் பழுக்கவைக்கும்போது பழத்தோலில் இருந்து அதிகளவில் நீர் ஆவியாகும்போது பழவெடிப்பு ஏற்படுகிறது.
தடுக்கும் வழிமுறைகள்: இவ்வாறு வாழைக்காய்களில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க வாழைக்காய்க்கு அவ்வப்போது தேவைக்கேற்ப நீர்பாய்ச்ச வேண்டும். தோட்டக்கால் நிலத்துக்கு வாரத்துக்கு ஒருமுறையும், நன்செய் நிலத்துக்கு 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்ச வேண்டும். இதுபோல் மண் பரிசோதனை செய்து மண்ணில் பொட்டாஷ், சுண்ணாம்பு மற்றும் மக்னீஷியம் அளவு 1:10:5 என்ற விகிதத்தில் இருக்குமாறு உர மேலாண்மை செய்ய வேண்டும் என்றார் அவர்.
வறட்சியின் பிடியில் விவசாயம் பல்வேறு நிலைகளிலும் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதனால் தென்மாவட்டங்களில் வறட்சியால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்ய அரசு உதவ வேண்டும்; வாழை உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்படுகிறது.