Monday, November 26, 2012


திருவெண்ணை நல்லூர் அருகே ஒரு ஏக்கரில் 106 டன் கரும்பு அறுவடை செய்து விவசாயி சாதனை படைத்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரையின் சார்பில் அரசூர் கரும்பு கோட்ட பகுதியான பேரங்கியூரில் முன்னோடி கரும்பு விவசாயி பூராசாமி என்பவரின் வயலில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம் ஒரு ஏக்கர் பரப்பளவில் 106 டன் அறுவடை செய்துள்ளார். 

அவரை ஆலையின் ஆட்சியர் அன்பரன் மற்றும் விவசாயிகள் பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குநர் சேகர், துணை இயக்குநர் கருணாகரன், கோட்ட புள்ளியியல் அலுவலர் குமரதாஸ், அரசூர் கோட்ட கரும்பு அலுவலர் தங்கமணி, திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி உதவி பேராசிரியர் அன்புமணி, வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண் உதவி இயக்குநர் இளவரசு, புள்ளியியல் வட்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விவசாயி பூராசாமியின் கரும்பு பயிர் மகசூல் மாநில அளவிலான கணக்கீடு செய்யப்பட்டது

அதில் ஒரு ஏக்கருக்கு 110 டன் கரும்பு பயிர் இருந்தது தெரியவந்தது. 
மேலும் போதுமான அளவு மழை இருந்தால் கரும்பு மகசூல் கூடுதலாக எடுக்கலாம் என விவசாயி தெரிவித்தார்.