Wednesday, November 21, 2012

பகவா மாதுளை

தமிழகத்தில் ரூ.100க்கும் குறையாமல் விற்பனையாகும் ஒரே பழம் மாதுளைதான். மகாராஷ்டிராவில் இருந்துதான் தமிழகத்திற்கு மாதுளை வந்துகொண்டுள்ளது. மாதுளையில் 2 ரகங்கள் பிரபலம். கணேஷ், பகவா. இதில் கணேஷ் நமது நாட்டு மாதுளையைப் போல் உள்ளே கடினமான விதையடன் முத்துக்கள் வெள்ளை நிறத்துடனும், "பகவா' சுத்த சிவப்பு நிறத்தில் மெல்லிய விதையுடனும் இருக்கும். ருசி, நிறம் காரணமாக பகவா குறைந்தபட்சமாக ரூ.100ல் ஆரம்பித்து ரூ.150வரை விற்பனையாகிறது.
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பகவா மாதுளைக் கன்றுகளை மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவந்து பயிர் செய்துள்ளனர். சுமாராக 80-100 ஏக்கர் வரை இங்கு பயிராகியுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை பூ எடுக்கிறது. ஆவணி, சித்திரை. செடி நடவு செய்து 18 மாதங்களுக்குள் வரும் பூக்களை உருவி விட்டுவிடுகின்றனர். செடி காய்க்க விடுவதில்லை. 18 மாதங்களுக்குப் பிறகே காய்க்க விட வேண்டுமாம். மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு 3 டன் மகசூல் எடுக்கின்றனர். செடியின் வயது 5 வருடத்திற்கு மேல்தான் இந்த மகசூல். மேலும் விபரங்களுக்கு: தமிழரசு, த/பெ.சென்னியப்பன், வேப்பமரத்தூர், கொமராயலூர் அஞ்சல், பவானி, ஈரோடு. 99428 25432. 


மரக்கன்றுகள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:


குமார் ஹைடெக் நர்சரி, (தமிழக அரசு உரிமம் பெற்றது), 204, மேகிணறு பிரிவு, என்.சி. பாளையம் அஞ்சல், மேட்டுப் பாளையம் ரோடு, அன்னூர்-641 653. கோவை மாவட்டம். 94877 05596, 93449 25596. மலைவேம்பு ரூ.6.00; தேக்கு ரூ.5.00; குமிழ் ரூ.5.00; செஞ்சந்தனம் ரூ.10.00; சந்தனம் ரூ.15.00; வேங்கை ரூ.10.00; சவுக்கு ரூ.3.00; தைலம் ரூ.3.00; சில்வர் ஓக் ரூ.6.00; மூங்கில் ரூ.15.00; வாகை ரூ.6.00; பெருமரம் ரூ.10.00 மற்றும் ஈடா ரூ.10.00 ஆகிய நாற்றுக்கள் கிடைக்கும். பாலாஜி ஆர்டிக்கல்சர்ஸ் நர்சிரி கார்டன், எம்.எம்.நகர், காஞ்சிபுரம். 97910 77543, 90030 50778. மரக்கன்றுகள் வழங்குவதோடு மட்டுமல்லாது குழி எடுத்தல், கன்று நடுதல், டிரிப் இர்ரிகேஷன் போன்ற பணிகளையும் ஆட்களை கொண்டு சிறப்பாக செய்து தருகிறார்கள். பார்ம் ஹவுஸ் அமைப்பது, லேண்ட் ஸ்கேப்பிங் செய்வது போன்ற சேவைகளையும் வழங்கிவருகிறார்கள்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்