நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், விதையினை பரிசோதனை செய்தால் அதிக மகசூல் பெறலாம் என விதை பரிசோதனை அலுவலர் சி. பெருமாள் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கார்த்திகைப் பட்டத்தில் இறவை நிலக்கடலை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். நிலக்கடலை சாகுபடியில் அதிக செலவு ஆகும் இடுபொருள் விதை ஆகும். எனவே தரமான விதையாக இருந்தால் தேவையான அளவு பயன்படுத்தி செலவைக் குறைக்கலாம்.
குறைந்தபட்ச முளைப்புத்திறன் 70 சதவீதம் இருந்தால்தான், இப்போது கிடைக்கும் மகசூலை விட 50 சதவீதம் கூடுதலாகப் பெற முடியும். எனவே விவசாயிகள் தங்களிடம் இருப்பில் இருக்கும் நிலக்கடலை விதையில் ஒரு கிலோ அளவுக்கு மாதிரியினை எடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள விதை பரிசோதனை அலுவலகத்தில் ரூ.30 செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)