கொடைக்கானலில் விளையும் கொய்மலர்களை சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.கொடைக்கானலில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம், 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, பசுமைக் குடில்கள் மூலம் கார்னேசன் போன்ற கொய்மலர்களை கொடைக்கானல் தாலுகாவில் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. காய்கறி சாகுபடிக்கு இணையாக விவசாயிகள் கொய்மலர்கள் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொய்மலர்களை சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன், தேசிய தோட்டக்கலை இயக்க தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்களும்,தோட்டக்கலை ஆராய்ச்சிநிலையத் தலைவர் ராஜாங்கம்,துணை இயக்குநர்கள் கந்தசாமி, ராஜாமுகமது, உதவி பொறியாளர் ஜான் ஆகியோர் மேல் பழனி மலைப் பகுதிகளான மன்னவனூர்,கவுஞ்சி, பூம்பாறை,கூக்கால் போன்ற பகுதிகளையும், கீழ் பழனிமலைப் பகுதிகளான தாண்டிக்குடி,பண்ணைக்காடு போன்றவற்றில் அமைக்கப்பட்டுள்ள காரனேசன் பசுமைக் குடில்களையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ராஜாமுகமது கூறியது:
கொடைக்கானலில் சுமார் 1.30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் உள்ளது. ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலிருந்து, குறைந்தபட்சம் ஒரு லட்சம் கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.(ஒரு கட்டு 20 பூக்கள் கொண்டது).
இவற்றின் விலை, பருவ காலத்திற்கேற்ப ரூ. 75 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சீசன் இல்லாத நேரங்களில் ரூ. 70 முதல் ரூ. 90 வரையிலும், கிறிஸ்துமஸ், புதுவருடம், காதலர்கள் தினம் போன்ற சீசன் காலங்களிலும் சாதாரணமாக ரூ. 180 முதல் ரூ. 200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.தற்சமயம் பெங்களூரு சந்தையில் ரூ. 180 ஆகவும், புதுதில்லி சந்தையில் ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல் பகுதியிலிருந்து மட்டும் ஏறத்தாழ ரூ. 300 லட்சம் முதல் ரூ. 500 லட்சம் மதிப்பிலான மலர் வர்த்தகப் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
வரும் காலங்களில் கொடைக்கானல் பகுதியில் புவிசார்ந்த தகவல்முறை (ஜி.ஐ.எஸ்.) மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வலைதளத்தின் மூலம் சர்வதேச அளவில் கொடைக்கானல் கொய்மலர்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.