தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தவறாமல் விதைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலர் ஆர்.பெரியசாமி கூறியது:தரமான விதைகளே நல்ல விளைச்சலுக்கு ஆதாரமாக உள்ளன.
எனவே, விதைகளின் முளைப்புத் திறன் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அதைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தக் குணங்கள் ஒவ்வொரு பயிருக்கு ஒரு வகையில் மாறுபடும்.
நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதைகளை உபயோகித்தால் மட்டுமே விதை செலவு குறையும். விதைகளை சேமிக்கும் போது பூச்சி நோய் தாக்குதலால் கெடாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். விதைகளின் முளைப்புத் திறனைக் காக்க விதைப் பரிசோதனை மூலம் ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளலாம்.
விதை விற்பனையாளர்கள் தங்களது இருப்பில் உள்ள விதையின் தரத்தை அறியவும், விவசாயிகள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறியவும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விதை மாதிரிகளை எடுத்து வந்து பரிசோதனைக் கட்டணமாக மாதிரிக்கு ரூ.30 அளித்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு விதைப் பரிசோதனை நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி-5 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகள் அளிக்கும் விதைகளின் பரிசோதனை முடிவுகள் 30 நாள்களுக்குள் அவரவர் முகவரிக்கே அனுப்பப்படும் என்றார் அவர்.